"என்னா ஆனந்தி லஞ்சுக்கு வாறியா நா இருக்கட்டுமா" எனக்கேட்டபடியே வந்தாள் பக்கத்து கவுண்டர்ப்பெண். அவள் பெயர் "விஜி" இந்திய வம்சாவழிப்பெண். "இல்ல விஜி இண்டைக்கு நான் மூண்டு மணியோட ஓப்வ் அதால நான் லஞ்ச் எடுத்துக்கொண்டு வரயில்ல வீட்ட போயே சாப்பிடப்போறன்" என்றாள் ஆனந்தி. "ஏன் திடீர்ணு காப்வ் டே'' "நித்திக்கு இருந்திருந்து பீவர் வருது இண்டைக்கு மொண்டசறி லீவுபோட்டிருக்கன் டொக்டரிட்ட காட்டி ஒருக்கா வடிவாச் சொக் பண்ண வேணும் அப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்" என ஆனந்தி சொல்ல "இண்டைக்கு புல்டே நீ லீவு போட்டிருக்கலாம் சரிப்பா நம்ம கவுண்டர் பையன் லஞ்ச் போயிருக்கான் ஆள்வருவுதுபோல அப்பறம் பாத்துக்கலாம்'" எனக்கூறி விஜி நகர ஆனந்தியின் கவுண்டருக்கு கஸ்ரமர் வர அவளும் வேலையில் மூழ்கினாள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment